×

இலங்கைக்கு எதிரான 2வது டி.20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி

டுனெடின்: நியூசிலாந்து-இலங்கை அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட டி.20 தொடரில் முதல் போட்டியில் சூப்பர் ஓவரில் இலங்கை வெற்றி பெற்ற நிலையில் 2வது போட்டி இன்று அதிகாலை டுனெடின் மைதானத்தில் நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை 19 ஓவரில், 141 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக தனஞ்செயா டி சில்வா 37, குசால் பெரோரா 35 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பவுலிங்கில் ஆடம் மில்னே 5 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து 14.4 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 146 ரன் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது, சாட் போவ்ஸ் 31 (15 பந்து, 7 பவுண்டரி) ரன்னில் வெளியேற நாட்அவுட்டாக டிம் சீஃபர்ட் 79 ரன் (3 பவுண்டரி, 6 சிக்சர்), கேப்டன் லதாம் 20 ரன் அடித்தனர். 3வது போட்டி வரும் 8ம்தேதி நடக்கிறது.

The post இலங்கைக்கு எதிரான 2வது டி.20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி appeared first on Dinakaran.

Tags : New Zealand ,2nd T20 ,Sri Lanka ,Dunedin ,Super ,T20 ,Dinakaran ,
× RELATED நியூசிலாந்து கேப்டன் பொறுப்பில் இருந்து கேன் வில்லியம்சன் விலகல்