×

இருந்திராப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகளுடன், 300 வீரர்கள் மல்லுக்கட்டு

விராலிமலை: இலுப்பூர் அடுத்த இருந்திராப்பட்டியில் இன்று நடந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த இருந்திராப்பட்டி முத்து மாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடந்தது. இதில் பங்கேற்க புதுகை, திருச்சி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் அழைத்து வரப்பட்டன. காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். இறுதியாக 700 காளைகள், 300 மாடுபிடி வீரர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

காலை 8.45 மணிக்கு ஜல்லிக்கட்டை இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதைதொடர்ந்து ஒவ்ெவாரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்கள் மற்றும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கு பீரோ, கட்டில், மின்விசிறி, மிக்சி, எவர்சில்வர் பாத்திரங்கள் மற்றும் ரொக்கத்தொகை பரிசாக வழங்கப்பட்டது. இலுப்பூர் டிஎஸ்பி காயத்திரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post இருந்திராப்பட்டியில் ஜல்லிக்கட்டு: 700 காளைகளுடன், 300 வீரர்கள் மல்லுக்கட்டு appeared first on Dinakaran.

Tags : Jallikattu ,Vithirapatti ,Viralimalai ,Ilupur ,Pudukottai district ,Dinakaran ,
× RELATED விராலிமலை மெய்க்கண்ணுடையாள் கோயில் பூச்சொரிதல் விழா