×

தொடர் மழையால் ஊட்டி பூங்காக்கள் பசுமையாகின

ஊட்டி : தொடர் மழையால் ஊட்டி பூங்காக்கள் பச்சை பசேல் என மாறின. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை துவங்கும். தொடர்ந்து இரு மாதங்கள் இந்த மழை நீடிக்கும். பின், அக்டோபர் மாதம் துவங்கி இரு மாதங்கள் வடகிழக்கு பருவமழை பெய்யும். இந்த மழையும் இரு மாதங்கள் நீடிக்கும். ஆனால், அதன் பின், மழை குறைந்து காணப்படும். நவம்பர் மாதம் முதல் பனி பொழிவு காணப்படும். பகல் நேரங்களில் வெயில் காணப்படும். இதனால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை செடிகள், வனங்கள் மற்றும் பூங்காக்கள் ஆகியவை பசுமை இழந்து விடும்.வனங்களில் ஆங்காங்கே காட்டு தீ ஏற்படும். தேயிலை செடிகள் காய்ந்து போய்விடும். பூங்காக்களில் நாள் தோறும் தண்ணீர் பாய்ச்சி தொழிலாளர்கள் பராமரிப்பு வழக்கம்.

ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக ஆண்டு முழுக்க நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்கிறது. கடந்த ஆண்டும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழை பெய்தது. இம்முறையும் கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதம் மழை குறைந்த போதிலும் கடந்த மாதம் இறுதி வாரம் முதல் நீலகிரி மாவட்டத்தில் நாள் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்து வருகிறது.

இதனால், காய்ந்து போய் காணப்பட்ட வனப்பகுதிகளில் தற்போது பசுமை திரும்ப துவங்கியுள்ளது. குறிப்பாக, ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா மற்றும் மரவியல் பூங்கா ஆகியவை பச்சை பசேல் என காட்சிளிக்கிறது. தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானங்கள் பச்சை கம்பளர் விரித்தார் போல் காட்சியளிக்கிறது. மலர் செடிகள் அனைத்தும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. அதேபோல், தேயிலை செடிகளும் துளிர்க்க ஆரம்பித்துள்ளன. ஓரிரு நாட்கள் இதேபோன்று மழை பெய்தால், வனங்களிலும் பசுமை திரும்பிவிடும்.

The post தொடர் மழையால் ஊட்டி பூங்காக்கள் பசுமையாகின appeared first on Dinakaran.

Tags : Basel ,Nilgiri District ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்