×

சட்ட விரோதமாக நீக்கம் செய்த தூய்மை பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

சென்னை: சிபிஐஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்துவந்த ஒப்பந்த தொழிலாளர்கள் 710 பேரை கடந்த 11ம் தேதி எந்தவித முன்னறிவிப்புமின்றி சட்ட விரோதமாக வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர். கொரோனா தடுப்பு பணியில் தங்களின் உயிரை பணயம் வைத்து மக்களை பாதுகாத்த இவர்களை வேலை நீக்கம் செய்துள்ள மாநகராட்சி நிர்வாகத்தின் மோசமான நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். சென்னை மாநகராட்சியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்தும், நிரந்தரப்படுத்தப்படாமல் உள்ள தொழிலாளிகளை நிரந்தரப்படுத்த வேண்டும் என  சிஐடியு, செங்கொடி சங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு விசாரணையில் வேலை செய்பவர்கள் குறித்த பட்டியல் இருதரப்பும் சரிபார்ப்பதற்கான நிலையில் உள்ளது. இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது சட்ட விரோதமாகும். அனைவரையும் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும், நிரந்தரமாக உள்ள துப்பரவு பணியை தனியாருக்கு வழங்க கூடாது….

The post சட்ட விரோதமாக நீக்கம் செய்த தூய்மை பணியாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும்: கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : K. Balakrishnan ,Chennai ,CPIM ,Secretary of State ,K. ,Balakrishnan ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வில் குளறுபடி மருத்துவ...