×

உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜ அமைச்சர் திடீர் ராஜினாமா: காங்கிரஸ் கட்சியில் இணைவு

புதுடெல்லி: உத்தரகண்ட் போக்குவரத்துத்துறை அமைச்சரும், பாஜகவின் மூத்த தலைவருமான யஷ்பால் ஆர்யா இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். உத்தரகண்ட், உத்தர பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் அடுத்தாண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளன. இந்நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் யஷ்பால் ஆர்யா, தனது பதவியை இன்று திடீரென ராஜினாமா செய்தார். பின்னர் அவர் தன்னை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார். அதேபோல், இவரது மகன் எம்எல்ஏ சஞ்சீவ் ஆர்யாவும் காங்கிரஸ் கட்சியில் இணைவதாக அறிவித்தார். தொடர்ந்து டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஹரிஷ் ராவத், கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் முன்னிலையில் யஷ்பால் ஆர்யாவும், அவரது மகனும் தங்களை காங்கிரசில் இணைத்துக் கொண்டனர். இதற்கிடையே காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உத்தரகாண்ட் மாநில பாஜக அமைச்சர், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. …

The post உத்தரகாண்ட் மாநிலத்தின் பாஜ அமைச்சர் திடீர் ராஜினாமா: காங்கிரஸ் கட்சியில் இணைவு appeared first on Dinakaran.

Tags : Utterkhand ,Baja ,minister ,New Delhi ,Uttarakhand ,Transport ,Bajaka Yashpal ,Arya ,Congress party ,Uttara ,Baja Minister ,Dinakaran ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...