×

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: பெரம்பூர் மாதவரம் நெடுஞ்சாலையில் நாளை முதல், 25ம் தேதி வரை மெட்ரோ ரயில் பணி மேற்கொள்ள இருப்பதால், மாதவரம் நெடுஞ்சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மூலக்கடை மார்க்கத்தில் இருந்து மாதவரம் நெடுஞ்சாலை வழியாக பெரம்பூர் ரயில் நிலையம் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு செல்பவர்கள், லட்சுமி அம்மன் கோயில் தெரு, மேல்பட்டி பொன்னப்பன் தெரு, பி.பி ரோடு, பெரம்பூர் நெடுஞ்சாலை வழியாக சென்றிட போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பெரம்பூரில் இருந்து, மூலக்கடை நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் மாதவரம் நெடுஞ்சாலையை தொடர்ந்து பயன்படுத்தலாம். …

The post மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Perampur ,Chennai ,Perampur Mathavaram Highway ,Metro Rail ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்