×

பள்ளபட்டி ஊராட்சியை `பாலோ’ செய்யுங்க-அனைத்து பிடிஓக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் அட்வைஸ்

சிவகாசி : தினகரன் செய்தி எதிரொலியால் பள்ளபட்டி ஊராட்சியில் உள்ளதைப் போல அனைத்து ஊராட்சிகளிலும் ஸ்டோன் பெஞ்சுகளில் வாழ்க்கை தத்துவங்களை எழுதலாம் என்று பிடிஓக்களுக்கும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது.சிவகாசி அருகே பள்ளபட்டி ஊராட்சியில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்டோன் பெஞ்சுகளில் நம்பிக்கையூட்டும் வாழ்க்கை தத்துவகங்கள் எழுதப்பட்டுள்ளன. முடியாது என்பது மூட நம்பிக்கை, முடியுமா என்பது அவநம்பிக்கை, முடியும் என்பது தான் தன்னம்பிக்கை போன்ற பல்வேறு நம்பிக்கையூட்டும் வாழ்க்கை தத்துவ வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது. இதுகுறித்து நேற்று முன்தினம் தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இந்த செய்தியை ஏராளமானோர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு பள்ளபட்டி ஊராட்சி நிர்வாகத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் ஆலோசனையின்படி விருதுநகர் மாவட்ட அனைத்து பிடிஓ, ஊராட்சி செயலாளருக்கு வாட்ஸ் அப் மூலம் மாவட்ட நிர்வாகம், தினகரன் செய்தியுடன் நேற்று ஒரு பதிவு போட்டிருந்தது. அதில், `பள்ளபட்டி ஊராட்சியில் ஸ்டோன் பெஞ்சுகளில் எழுதப்பட்டுள்ள வாழ்க்கை தத்துவங்கள் போன்று அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள ஸ்டோன் பெஞ்சுகளில் எழுதலாம்’ என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சி சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது….

The post பள்ளபட்டி ஊராட்சியை `பாலோ’ செய்யுங்க-அனைத்து பிடிஓக்களுக்கும் மாவட்ட நிர்வாகம் அட்வைஸ் appeared first on Dinakaran.

Tags : District Administration ,Ptos ,Pathalatti Prawadi ,Shivakasi ,Dinakaran ,Pallapatti Uruchi ,
× RELATED குழந்தைகளுக்கான கலை இலக்கிய கோடைகால...