×

பொன்னையாற்றில் பரபரப்பு கால்நடைகளுடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன்-தீயணைப்பு துறையினர் மீட்டனர்

பொன்னை :  பொன்னையாற்று வெள்ளத்தில் சிக்கிய தந்தை மகனை தீயணைப்புத்துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கலவகுண்டா அணை நிரம்பியதால் நேற்று காலை திறந்து விடப்பட்டது. இதனால், பொன்னையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பொன்னை அணைக்கட்டுப் பகுதியில் தடுப்பு சுவரை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடி வருகிறது. இந்நிலையில், பொன்னையாற்றில் காலை 9 மணியளவில் மாடு மேய்த்து கொண்டிருந்த சங்கம் பகுதியை சேர்ந்த ரவி(47), அவரது மகன் சோழவர்மன்(8) ஆகியோர் வெள்ளத்தில் சிக்கி கொண்டு கரைக்கு திரும்ப முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். மேலும், இவர்களுக்கு சொந்தமான 7 மாடுகளும் ெவள்ளத்தில் சிக்கி கொண்டு கரைக்கு வர முடியாமல் தவித்தது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் காட்பாடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் பால்பாண்டி தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் வெள்ளத்தில் சிக்கியிருந்த ரவி, சோழவர்மன் மற்றும் 7 மாடுகளையும் கயிறு கட்டி சுமார் 4 மணி நேரம் போராடி மீட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதேபோல், மேல்பாடி அடுத்த வெப்பாலை கிராம பொன்னையாற்றில் அதே பகுதியை சேர்ந்த சேர்ந்த ஜெயசீலன்(55) என்பவர் தனக்கு ெசாந்தமான 15க்கும் மேற்பட்ட ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தார். பொன்னையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஜெயசீலன் சிக்கி கொண்டார். மேலும், அவரது 15 ஆடுகளும் வெள்ளப்பெருக்கில் சிக்கி கொண்டது. இதுகுறித்து, தகவலறிந்த மேல்பாடி எஸ்ஐ கார்த்தி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வெள்ளப்பெருக்கில் சிக்கியிருந்த ஜெயசீலன், 15 ஆடுகளை பத்திரமாக கயிறு கட்டி சுமார் 1 மணி நேரம் போராடி மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் செல்ல தடைபொன்னையாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கு காரணமாக ஆற்றுபாலத்தில் வாகனங்கள் செல்ல விடாமல் நேற்று காலை 11 மணியளவில் பேரிகார்டு அமைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து, ஆற்றில் வெள்ளம் குறைய தொடங்கியதையடுத்து சுமார் 2 மணி ேநரத்திற்கு பின்னர் மீண்டும் ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் செல்ல போலீசார் அனுமதித்தனர். கடந்தாண்டு பொன்னையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றுப்பாலம் சேதமடைந்தது. இதனை கருத்தில்கொண்டு வெள்ளம் அதிகமாக இருந்தபோது ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் செல்லவிடாமல் பேரிகார்டு வைத்து தடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்….

The post பொன்னையாற்றில் பரபரப்பு கால்நடைகளுடன் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய தந்தை, மகன்-தீயணைப்பு துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Ponnayadad ,Ponna ,-Fire Department ,Bonnayadar ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரி வெடிவிபத்து:...