×

கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பல்கலை வளாகங்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி: பல்கலை கழக வளாகங்களை திறக்கக்கோரியும், பட்டப்படிப்பு சான்றுகளை உரிய காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும்  தெரிவித்து அகில இந்திய மாணவர்கள் சங்கத்தை(ஏஐஎஸ்ஏ) சேர்ந்தவர்கள் மத்திய கல்வி அமைச்சக அலுவலகம் முன்பாக திரண்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 6க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அனைத்து பல்கலை கழகங்களும் கடந்த ஆண்டு மார்ச் முதல் மூடப்பட்டது. இதனால் ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. எனினும், இதில், பல மாணவர்கள் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும் கிராப்புறங்களில் இருந்து கல்வி பயில வந்தவர்கள் என்பதால் கல்வி கற்பதில் சமநிலையற்ற நிலை நீடித்தது. பல்வேறு மாணவர்களால் ஆன்லைனில் வகுப்புகளை கவனிக்க முடியாமல் திண்டாடினர். இதற்கு ஆன்லைன் வசதி, நெட்வொர்க் பிரச்னை, போதிய வசதியின்னை போன்ற பல்வேறு காரணங்கள் இருந்தன. இந்நிலையில், பல்கலை வளாகங்கள் மூடப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டநிலையில், அவற்றை உடனே திறக்க வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கத்தை சேர்ந்த 15க்கம் மேற்பட்டவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய கல்வி அமைச்சக அலுவலகம் எதிரே நின்று இந்த போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் 6-8 பேரை தடுத்து நிறுத்தி விசாரணைக்காக மந்திர் மார்க் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனிடையே, அகில இந்திய மாணவர் சங்கம் (ஏ.ஐ.எஸ்.ஏ) மற்றும்  ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர் சங்கம் (ஜே.என்.யு.எஸ்.யூ)  ஆகியோர் சார்பில் பல்கலைக்கழக மானியக்குழுவின்(யு.ஜி.சி) தலைவரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், பல்கலை கழக வளாகங்களை மீண்டும் திறக்க வேண்டும்.ஆன்லைன் வகுப்பு நடைமறைகளை உடனடிாக நிறுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் பெல்லோஷிப் வழங்குதல், ஸ்காலர்ஜிப், இடஒதுக்கீடு கொள்கையை நீர்த்து போக செய்வதை தடுத்தல், மனரீதியாக பாதிப்புக்குள்ளா மாணவர்களுக்கு கவுன்சிலிங் உள்ளிட்ட கோரிக்கைகை குறிப்பிட்டு மனு அளித்தனர். இந்த மனுவில் ஏஐஎஸ்ஏ பொதுச்செயலர் பிரசன்ஜித் குமார், ஜேஎன்யுஎஸ்யு பொதுச்செயலர் சத்திஷ் சந்திரா யாதவ் உள்ளிட்டோர் கையெழுத்திட்டு மனு அளித்தனர். …

The post கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட பல்கலை வளாகங்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : corona ,New Delhi ,India ,Corona lockdown ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்கு பிறகு நல திட்டங்களில்...