×

விவசாயிகளுக்கு நுண்ணீர் திட்ட பாசன பயிற்சி

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டி அருகே, மேல்மங்கலத்தில் வேளாண்துறை மற்றும் உழவர் நலத்துறை, ஆட்மா மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத்திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு நுண்ணீர் திட்ட பாசன பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை துணை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) முத்துலட்சுமி தலைமை வகித்தார். வேளாண்மை துணை இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) வளர்மதி முன்னிலை வகித்தார். விவசாயிகள் தங்களின் நிலத்தில் உள்ள குறைந்த அளவு நீரை பயன்படுத்தி, அதிக அளவு சாகுபடி செய்தல், மத்திய, மாநில அரசுகள் இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் பொருட்டு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவிகிதம் மானியம் வழங்குதல் ஆகியவை குறித்து விளக்கப்பட்டது. சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர் நிறுவனங்களின் தொழில்நுட்ப கருத்துக்காட்சி அமைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பெரியகுளம் வேளாண்மை உதவி இயக்குனர் சென்றாயன், ஆட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் ரேவதி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் பிரிசில்லா, கண்ணன் ஆகியோர் செய்திருந்தனர். இந்த பயிற்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்….

The post விவசாயிகளுக்கு நுண்ணீர் திட்ட பாசன பயிற்சி appeared first on Dinakaran.

Tags : Devadanapatti ,Department of Agriculture and Farmers' Welfare Department ,Aadma ,Melmangalam ,Dinakaran ,
× RELATED தேவதானப்பட்டி பகுதிகளில் கனமழை...