×

உ.பி.யில் கொரோனா தேவி கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு: மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்

டெல்லி : உத்தரப் பிரதேசத்தில் கொரோனா மாதா கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது. உத்தரப் பிரதேச மாநில பிரதாப்கர் மாவட்டம் ஜுஹி சுகுல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ் குமார் ஸ்ரீவஸ்தவா.இவர் உள்ளூர்வாசிகளிடம் தானம் பெற்று ஊரில் கரோனா மாதா கோயிலைக் கட்டினார். ஒரு சிலை நிறுவப்பட்டு, தினசரி பூஜைக்கு ராதே ஷ்யாம் வர்மா என்பவர் பூசாரியாக நியமிக்கப்பட்டார். இந்தக் கோயில் அவருக்கும், நாகேஷ் குமார், ஜெய் பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது.இதற்கிடையில், நாகேஷ் என்பவர் காவல்நிலையத்தில் கோயில் அமைக்கப்பட்டுள்ள நிலம் தன்னுடையது என்றும், தன் நிலத்தை அபகரிக்கவே சிலர் கொரோனா மாதா கோயிலைக் கட்டியதாகவும் புகாரளித்தார்.நாகேஷின் புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் அவரின் நிலத்தில் கட்டப்பட்டிருந்த கொரோனா மாதா சிலையைக் கைப்பற்றி கோயிலை இடித்து தரைமட்டமாக்கினர். இந்த நிலையில் கொரோனா மாதா  கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த தீப்மாலா ஸ்ரீவஸ்தவா என்பவர் அரசியலமைப்புச் சட்டத்தின் 32-வது பிரிவின் கீழ் பொதுநல மனுத்தாக்கல் செய்தார்.இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கவுல், என்.எம்.சுந்தரேஷ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு, “இந்தக் கோயில் சர்ச்சைக்குரிய நிலத்தில் கட்டப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், தனியார் நிலத்தில் உள்ளூர் விதிகளின்படி கட்டப்பட்டுள்ளது. கோயில் இடிக்கப்பட்டதாகக் கோயில் கட்டியவர்கள் எந்த நிவாரணமும் கோரவில்லை. ஆதலால், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்த மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து வழக்கைத் தள்ளுபடி செய்கிறோம். இந்த அபராதத்தை உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் நல நிவாரண நிதிக்கு வழங்கிட வேண்டும்” எனத் தெரிவித்தது…

The post உ.பி.யில் கொரோனா தேவி கோயில் இடிக்கப்பட்டதற்கு எதிரான மனு: மனுதாரருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம் appeared first on Dinakaran.

Tags : Corona Devi temple ,UP ,Supreme Court ,Delhi ,Corona Mata Temple ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED பூத் ஏஜெண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட...