×

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக உருவான சினிமா டீசர்

சென்னை: சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் என்.கிஷோர் இயக்கியுள்ள படம், மாயோன். இளையராஜா இசை அமைக்க, அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்துள்ளார். இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் கேட்டு ரசிக்கும் வகையில் ஆடியோ விளக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. கின்னஸ் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி இளங்கோ குரல் கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், ‘வெளிநாடுகளில் முழு படத்துக்கும் பிரத்தியேக கருவிகள் மூலமாக, மாற்றுத்திறனாளிகள் மட்டும் ரசிக்கும் வகையில் ஆடியோ விளக்கம் தரப்படுகிறது. இதற்கு முன்பு சைக்கோ தமிழ் படத்துக்கு  ஆடியோ விளக்கம் தரப்பட்டிருந்தது’ என்றார்….

The post பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்காக உருவான சினிமா டீசர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,CB Sathyaraj ,Tanya Ravichandran ,kishore ,Ilayaraja ,Lingua ,
× RELATED ரசவாதி படத்தில் ஐடி பெண்ணாக தான்யா ரவிச்சந்திரன்