×

இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைய முயற்சி

தவாங்: இந்திய எல்லைப்பகுதிக்குள் சீன படைகள் கடந்த வாரம் அத்துமீறி நுழைய முயற்சி செய்த போது மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தை ஒட்டிய தவாங் பகுதியில் இந்த மோதல் சில மணி நேரங்கள் வரை நீடித்ததாக இந்திய ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. சீனப்படைகளை இந்திய படைகள் தடுத்து நிறுத்தியதாகவும், அதன்பிறகு இரு தரப்பிலும் உள்ளூர் படை தளபதிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மோதல் முடிவுக்கு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் இரு தரப்பில் இருந்தும் எந்த சேதமும் இல்லை என்றும் கூறப்படுகிறது. கிழக்கு எல்லைப்பகுதி லடாக் பிரச்சனைக்கு தீர்வு காண இந்திய சீன உயர்நிலை பேச்சுவார்த்தைகளுக்கு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் இந்த மோதல் நடந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்திய சீன எல்லையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே பதற்ற நிலையே நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது….

The post இந்திய எல்லைக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைய முயற்சி appeared first on Dinakaran.

Tags : Tawang ,Indian border ,Indian ,Dinakaran ,
× RELATED பள்ளிக்கூட வாசலில் வாகனத்தை...