×

புலியின் நடமாட்டம் இல்லை!: சிங்காரா வனப்பகுதியில் புலியை பரண் மீது இருந்து தேடும் பணி நிறுத்தம்..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த மசினகுடி சிங்காரா வனப்பகுதியில் மரங்கள் மீது அமைக்கப்பட்ட பரண்கள் மீது இருந்து புலியை கண்காணிக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. மசினகுடியில் 4 பேரை கொன்ற T-23 என்று பெயரிடப்பட்ட புலியை பிடிக்க இன்று 14வது நாளாக தொடர் தேடுதல் நடைபெற்று வருகிறது. சிங்காரா வனப்பகுதியில் சுமார் 1 கிலோ மீட்டர் சுற்றளவில் 4 இடங்களில் மரங்களின் மீது பரண்கள் அமைத்து அதில் இருந்தபடி மரங்களின் கீழே மாடுகளை கட்டி கடந்த 3 நாட்களாக வனத்துறையினர் கண்காணித்து வந்தனர். ஆனால் புலியின் நடமாட்டம் இருப்பதற்கான தடயம் ஏதும் கிடைக்காததால் பரண்கள் மீதிருந்தபடி கண்காணிப்பதை வனத்துறையினர் தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர். புலியின் நடமாட்டம் கண்டறியப்பட்ட பின் மீண்டும் பரண்கள் மீது இருந்து கண்காணிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என வனத்துறையினர் கூறியுள்ளனர். ஆனால் புலியை தேடும் மற்ற தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். சிங்காரா வனப்பகுதியில் மருந்து குடோன் என்ற இடத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன் எருமை ஒன்றை தாக்கிய புலி அதனை தொடர்ந்து 3 நாட்களாக உணவாக சாப்பிட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் புலி பகல் நேரத்தில் வெளியில் நடமாடுவது குறைந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். …

The post புலியின் நடமாட்டம் இல்லை!: சிங்காரா வனப்பகுதியில் புலியை பரண் மீது இருந்து தேடும் பணி நிறுத்தம்..!! appeared first on Dinakaran.

Tags : Singara ,Neelagiri ,Masinagudi Singara forest ,Kudaluru ,Nilagiri district ,Singara forest ,
× RELATED சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 3...