×

சின்ன வெங்காய பயிரில் திருகல் நோய்-கட்டுப்படுத்தும் முறைகள்

திருச்செங்கோடு : மல்லசமுத்திரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் வாசு தெரிவித்துள்ளதாவது:மல்லசமுத்திரம் வட்டாரத்தில் 250 ஏக்கரில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சின்ன வெங்காயம் நடவு செய்து 10 முதல் 30 நாட்களில் பூஞ்சான் தாக்குதலால் திருகல் அல்லது அடிஅழுகல் நோய் ஏற்படுகிறது. இந்நோயினால் பயிர் முற்றிலும் சேதமடைய வாய்ப்புள்ளது. ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளைக் கடைபிடிப்பதால் பயிரை நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். சின்ன வெங்காயம் சாகுபடி செய்ய, நல்ல வடிகால் வசதியுள்ள நிலத்தை தேர்வு செய்ய வேண்டும். ஒன்றரை அடி உயரமுள்ள பார்கள் அமைத்து வெங்காய குமிழ்களை பார்களில் நடவு செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்வதற்கு ஒரு கிலோ விதை குமிழ்களுக்கு 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி சேர்த்து 24 மணி நேரம் உலரவிட்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.கடைசி உழவின் போது ஏக்கருக்கு ஒரு கிலோ டிரைக்கோவிரிடி, ஒரு கிலோ சூடோமோனாஸ் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஆகியவற்றை, 100 கிலோ நன்கு மக்கிய தொழு உரத்துடன் கலந்து 7 நாட்கள் நிழலில் வைத்திருந்து, பிறகு நிலத்தில் இடலாம். இதனால் நோய் பாதிப்பும் குறையும். திருகல் நோய் ஆரம்ப நிலையில்  கார்பெண்டாசிம், அதிகரித்த நிலையில் .  புரோபிகோனசோல் அல்லது ஹெக்சகோனசோல்  பயன்படுத்தலாம். அழுகல் நோய் பாதித்த செடிகளை அகற்றி எரித்து விடவேண்டும். மேலும் தகவல்களுக்கு தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்….

The post சின்ன வெங்காய பயிரில் திருகல் நோய்-கட்டுப்படுத்தும் முறைகள் appeared first on Dinakaran.

Tags : Tiruchengode ,Mallasamuthram district ,Vasu ,
× RELATED திருச்செங்கோட்டில் ₹1.90 கோடிக்கு மஞ்சள் விற்பனை