×

தண்டவாளத்தில் விரிசல்: ரயில் சேவை பாதிப்பு

தாம்பரம்: தாம்பரம் – பெருங்களத்தூர் ரயில் நிலையம் இடையே இரும்புலியூர் பகுதியில் நேற்று அதிகாலை ரயில்வே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. தகவலறிந்தும் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து  அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள்  சம்பவ இடத்துக்கு சென்று தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை சரி செய்யும் பணியில் தீவிரமாக  ஈடுபட்டனர். இதனால், கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு பின்பு மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது. இந்நிலையில், அதிகாலை 4 – 5 மணி வரை ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட  விரிசல் சரி செய்யும் பணி நடைபெற்றதால் தென் மாவட்டத்தில் இருந்து நேற்று அதிகாலை சென்னை வந்த ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.  இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனைத்தொடர்ந்து, விரிசல் சரி செய்யப்பட்டு மீண்டும் வழக்கம்போல் ரயில்கள் இயக்கப்பட்டது….

The post தண்டவாளத்தில் விரிசல்: ரயில் சேவை பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Perungalathur ,Irulyur ,Dinakaran ,
× RELATED வெல்டிங் தீப்பொறி விழுந்து விபரீதம்:...