×

மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்…வதந்திகளையும் பரப்பாதீர்.: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

சென்னை: மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே கோவாக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில்  அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் இம்மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தடுப்பூசி போட்டுகொள்ளவுள்ளதாக தெரிவித்த நிலையில் தேதி மாற்றப்பட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இதனை அடுத்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது; ஒரு மருத்துவர் என்கிற முறையில் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி குறித்த நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொள்வதாக அவர் தெரிவித்தார்.மேலும் தமிழகத்தில் 907 பேர் மட்டுமே கோவாக்சின் எடுத்துள்ளதால் 908-வது நபராக நான் போட்டுக்கொண்டேன். கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்வதில்லை எந்த தயக்கமும் வேண்டாம்,பின்னர் வதந்திகளையும் பரப்பாதீர் என அவர் தெரிவித்தார். மேலும் 1 லட்சத்து 69 ஆயிரம் கோவாக்ஷின் மருந்துகள் தமிழகம் வர உள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தகவல் அளித்துள்ளார். தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி இதுவரை 42,947 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. …

The post மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தவே கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டேன்…வதந்திகளையும் பரப்பாதீர்.: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tamil Nadu ,Health Minister ,C. vijayapascar ,Minister ,Vijayapaskar ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்