×

கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையமிடும் பணி

வேதாரண்யம்: கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையமிடும் பணி துவங்கியது.நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுகா கோடியக்கரையில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் அக்டோபர் முதல் மார்ச் வரை ரஷ்யா, ஈரான், ஈராக், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 247 வகையான பறவைகள் வந்து தங்கி செல்வது வழக்கம்.தற்போது மழை பெய்ய தொடங்கி இருப்பதால் ரஷ்யாவிலிருந்து 20க்கும் மேற்பட்ட சிறவி வகை பறவைகள் வந்து குவிந்துள்ளன.மேலும் செங்கால் நாரை, பூநாரை, கூழைக்கடா, கடல்காகம், கடல்ஆலா, சிறவி உள்ளிட்ட 50 வகையான பறவைகள் வரத் துவங்கியுள்ளன. இப்பறவைகளுக்கு மும்பை பறவை ஆராய்ச்சி நிலைய பறவை விஞ்ஞானி பாலச்சந்திரன் மற்றும் குழுவினர் பறவைகளுக்கு காலில் வளையமிடும் பணியை துவங்கியுள்ளனர்.கோடியக்கரை சரணாலயத்திற்கு வரும் பறவைகளை பிடித்து அதன் கால்களில் பறவையின் இடைக்கு தகுந்தார்போல் சிறிய வகை வளையம் இடப்படுகிறது. பறவையின் இனம், அலகின் நீளம், சிறகின் நீளம், எடை உள்ளிட்டவைகள் குறிக்கப்பட்டு பின்பு காலில் வளையம் இடப்பட்டு பாதுகாப்பாக பறக்க விடப்படுகிறது.இப்பறவை மீண்டும் வெளிநாட்டில் பறவை ஆராய்ச்சியாளர்களால் பிடிக்கப்பட்டால் காலில் உள்ள வளையத்தின் மூலம் எந்த நாடுகளில் இருந்து எத்தனை கிலோமீட்டர் தூரம் பறவைகள் வந்துள்ளது என்பது குறித்து அறிவதற்காக இந்த வளையங்கள் பறவை காலில் பொருத்தப்படுகிறது. இப்பறவைகளுக்கு காலில் வளையம் இடும்பன் என்ற குறித்து கோயம்புத்தூரில் இருந்து வந்த பயிற்சி உதவி வன பாதுகாவலர்களுக்கு கோடிக்கரை வனச்சரகர் அயூப்கான் தலைமையில்பயிற்சி அளிக்கப்பட்டது….

The post கோடியக்கரை பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டு பறவைகளுக்கு காலில் வளையமிடும் பணி appeared first on Dinakaran.

Tags : Godiakkar Bird Sanctuary ,Vedaranagar ,Godiyakkara Bird Sanctuary ,Nagai District ,Vedaranayam ,Thaluka ,Kodiyakaram ,Kodiyakar Bird Sanctuary ,Dinakaran ,
× RELATED சீசன் முன்கூட்டியே துவங்கியது;...