×

சையது முஷ்டாக் அலி டி 20 கோப்பை போட்டி: தமிழக அணியில் விளையாடும் சேலம் வீரர்கள்

சேலம்:சையது முஷ்டாக் அலி டி20 கோப்பை போட்டிக்கான அறிவிக்கப்பட்டுள்ள தமிழக அணியில் சேலத்தைச் சேர்ந்த டி.நடராஜன், ஆர்.விவேக் ராஜ் ஆகிய இருவர் இடம் பிடித்துள்ளனர். சையத் முஷ்டாக் அலி டி 20 கோப்பை போட்டிக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேலத்தைச் சேர்ந்த இரு வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.டி.நடராஜன் சேலத்தை அடுத்த சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த டி. நடராஜன். வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக விளையாடியவர். இவர் சையது முஷ்டாக் அலி டி 20 கோப்பைக்கான தமிழக அணியில் இடம் பெற்றுள்ளார்.தற்போது ஆர்.நடராஜனை தொடர்ந்து, மேட்டூரை சேர்ந்த ஆர்.விவேக் ராஜ் (29), சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான தமிழக அணியில் இடம் பிடித்துள்ளார்.டி.என்.பி.எல். போட்டிகளில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி வரும் ஆர்.விவேக் ராஜ்,  பேட்டிங் மற்றும் பந்துவீச்சு, ஃபீல்டிங் என சிறந்த ஆல் ரவுண்டராக உள்ளார். டி.என்.பி.எல். போட்டிகளில் திண்டுக்கல் அணிக்காக கடந்த 5 சீசன்களில் விளையாடி 850 ரன்களை குவித்துள்ளார். இவர் 21 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரிகள் அடித்து அதிவிரைவாக 50 ரன்களை குவித்துள்ளார். மூன்றாவது டி.என்.பி.எல். தொடரில் 11 பந்துகளில் 41 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.அதே தொடரில் ஒரு ஓவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் என 32 ரன்கள் குவித்தது சாதனையாக உள்ளது. டி.என்.பி.எல். 5 சீசன் போட்டிகளில் அதிகபட்ச சிக்ஸர்கள் அதாவது 64 சிக்ஸர்களை அடித்து சாதனை படைத்த ஒரே வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். அந்தவகையில், டி.என்.பி.எல். போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆல்ரவுண்டர் ஆர்.விவேக் ராஜ், சையது முஷ்டாக் அலி டி 20 கோப்பைக்கான அணியில் தேர்வாகி உள்ளார். கடந்த 2019 இல் சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான போட்டியில் தேர்வாகி தமிழக அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக ஆர்.விவேக் ராஜ் கூறுகையில், தமிழக அணிக்காக நன்றாக விளையாடி  திறமையை வெளிப்படுத்துவேன். அதன்மூலம் அடுத்து வரும் ஐ.பி.எல். தொடர்களில்  இடம்பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்….

The post சையது முஷ்டாக் அலி டி 20 கோப்பை போட்டி: தமிழக அணியில் விளையாடும் சேலம் வீரர்கள் appeared first on Dinakaran.

Tags : Syed ,Mushtaq Ali ,T20 Cup ,Salem ,Tamil ,Nadu ,D.Natarajan ,R.Vivek Raj ,Tamil Nadu ,Syed Mushtaq Ali T20 Cup ,Syed Mushtaq ,Ali T20 Cup ,Dinakaran ,
× RELATED விருத்தாசலம் அருகே ரயிலில் இருந்து...