×

கடந்த பத்தாண்டுகளாக பழிவாங்கப்பட்டவர் ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினராக முன்னாள் டிஜிபி சுனில்குமார் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினராக, முன்னாள் டிஜிபி சுனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக முன்னாள் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் உள்ளார். இவருக்கு கீழ் முன்னாள் மாவட்ட மாஜிஸ்திரேட் பாலசுப்பிரமணியம், பொதுப்பணித்துறை முன்னாள் பொறியாளர் மனோகரன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தநிலையில், இந்த ஆணையத்தின் உறுப்பினராக முன்னாள் டிஜிபி சுனில்குமாரை நியமித்து, தமிழக வீட்டு வசதி வாரிய செயலாளர் ஹித்தேஷ்குமார் மக்வானா உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையத்தில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகிறவர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம். அல்லது 65 வயது வரை பதவியில் இருக்கலாம். முன்னாள் டிஜிபி சுனில்குமார், கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 3 மாதத்துக்கு ஒரு முறை பந்தாடப்பட்டு வந்தார். அதில், பல முறை ‘டம்மி’யான பதவியில் நியமித்திருந்தனர். பின்னர், அடிக்கடி பல இடங்களுக்கு மாற்றப்பட்டு, கடைசியாக போட்ட பதவிகளிலேயே மீண்டும் நியமித்து வந்தனர். இதனால் பல ‘டம்மி’ பதவிகளை 2 முறை வகித்திருப்பார். இவர், கடந்த ஏப்ரல் மாதம் ஓய்வு பெற்றார். தற்போது ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்….

The post கடந்த பத்தாண்டுகளாக பழிவாங்கப்பட்டவர் ரியல் எஸ்டேட் ஆணைய உறுப்பினராக முன்னாள் டிஜிபி சுனில்குமார் நியமனம்: தமிழக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGP ,Sunilkumar ,Real Estate Commission ,Tamil ,Nadu Govt ,Chennai ,Sunil Kumar ,Tamil Nadu government ,Tamil Nadu ,
× RELATED பாமகவினர் மீது நடவடிக்கை எடுக்கக்...