×

3 வேளை அன்னதான திட்டத்தின் கீழ் திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு காலை டிபன்

திருத்தணி: தமிழக அரசின் 3 வேளை அன்னதான திட்டத்தின் கீழ் திருத்தணி முருகன் கோயிலில் நேற்று காலை பக்தர்களுக்கு டிபன் வழங்கப்பட்டது. திருத்தணி, திருச்செந்தூர் மற்றும் சமயபுரம் மாரியம்மன் ஆகிய கோயில்களில் 3 வேளையும் அன்னதான திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் துவங்கி வைத்தார். இதையடுத்து மேற்கண்ட கோயில்களில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 1ம்தேதி முதல் மேற்கண்ட கோயில்களில் காலையில் டிபன் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஏற்கனவே அறிவித்தார். ஆனால் கடந்த 3 நாட்களாக கோயிலில் பக்தர்களுக்கு தரிசனத்துக்கு அனுமதிமறுக்கப்பட்டதால் நேற்று முன்தினம் முதல் டிபன் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி திருத்தணி முருகன் கோயிலில் நேற்று முன்தினம் முதல் காலை பொங்கல், நொய் அரிசி உப்புமா உள்ளிட்ட உணவுகள் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. …

The post 3 வேளை அன்னதான திட்டத்தின் கீழ் திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்களுக்கு காலை டிபன் appeared first on Dinakaran.

Tags : Diban ,Thiruthani ,Murugan ,Temple ,Tiruthani ,Government of Tamil Nadu ,
× RELATED மதுரை மாவட்டம் மேலூரில் டிபன் பாக்ஸ் குண்டு வீச்சு: போலீசார் விசாரணை!