×

பருவநிலை பாதிப்பை தடுக்க போப், மத தலைவர்கள் கூட்டாக கோரிக்கை

வாடிகன் சிட்டி:  ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் வரும் 31ம் தேதி தொடங்கி நவம்பர் 12ம் தேதி வரை பருவநிலை மாற்ற உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும், நீராவி, கார்பன்டைஆக்சைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு உள்ளிட்டவற்றின் அதிகப்படியான வெளியேற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று போப் பிரான்சிஸ் மற்றும் பல்வேறு மத தலைவர்கள் வலியுறுத்தி இருக்கின்றனர். மேலும் இது தொடர்பாக அனைவரும் இணைந்து தங்களது கோரிக்கையை மாநாட்டுக்கு முன்னதாக பருவநிலை உச்சி மாநாடு தலைவர் அலோக் சர்மாவிடம் வழங்க திட்டமிட்டுள்ளனர். இந்த கோரிக்கை மனுவில்,” நாங்கள் ஒரு பூங்காவை பாரம்பரியமாய் வைத்துள்ளோம். எங்களது குழந்தைகளுக்கு பாலைவனத்தை விட்டுச்செல்வதற்கு நாங்கள் விரும்பவில்லை. எனவே பருவநிலை மாற்ற பாதிப்புக்களை தடுப்பது தொடர்பான லட்சிய இலக்கு நடவடிக்கைளை அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் போப் பிரான்சிஸ், இஸ்லாமியி் தலைவர்கள், புத்தமதத்தை சேர்ந்தவர்கள், இந்துக்கள், என கூட்டாக கையெழுத்திட்டுள்ளனர்.  …

The post பருவநிலை பாதிப்பை தடுக்க போப், மத தலைவர்கள் கூட்டாக கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Pope ,Vatican City ,Glasgow, Scotland ,Dinakaran ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு