பந்தலூர் : பந்தலூர் அருகே அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ பகுதியில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். பந்தலூர் அருகே அரசு தேயிலைத்தோட்டம் டேன்டீ பாண்டியார் 4 பி மற்றும் நெல்லியாளம் டேன்டீ பகுதியில் நேற்று வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். தேயிலைச்செடிகளை முறையாக கவாத்து செய்வது குறித்தும்,பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது, பசுந்தேயிலை மகசூலை எவ்வாறு அதிகப்படுத்துவது குறித்து டேன்டீ ஊழியர்களுக்கு அறிவுரை கூறினார். தொடர்ந்து தொழிலாளர்களை சந்தித்து அமைச்சர் பேசுகையில், ஏற்கனவே பணி செய்து வந்த தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக தொழிலாளர்களை பணியில் சேர்த்து டேன்டீயை லாப நோக்குடன் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதற்கு தொழிலாளர்கள் ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என்றார்.தொடர்ந்து தொழிலாளர்கள் கூறுகையில் காட்டு யானைகள் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது.தொழிலாளர்கள் குடியிருப்புகளை மற்றும் கோவில்களை சேதப்படுத்துவது தொடர்கிறது. காட்டு யானைகளிடமிருந்து தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என அமைச்சரிடம் கூறினர். நிகழ்ச்சியில் டேன்டீ மேலாண்மை இயக்குனர் சீனிவாச ரெட்டி,பொது மேலாளர் ஜெயராஜ்,கோட்ட மேலாளர்கள் ராமன்,சிவக்குமார், ஸ்ரீதர்,புஸ்பராணி மற்றும் முன்னால் எம்எல்ஏ திராவிடமணி, டேன்டீ கள நடத்துனர்கள் உடனிருந்தனர்….
The post அரசு தேயிலைத்தோட்டத்தில் வனத்துறை அமைச்சர் ஆய்வு appeared first on Dinakaran.