×

வரி ஏய்ப்பு புகார்!: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை..!!

சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள பச்சையப்பாஸ் துணி கடையிலும், காஞ்சிபுரத்தில் 8 இடங்களிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று காலை முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நாகாலத்து தெருவில் உள்ள எஸ்.கே.பி. சீட் நிறுவன உரிமையாளர் ஸ்ரீநிவாசன் வீடு, ரங்கசாமிக்குளம் பகுதியில் உள்ள அலுவலகம், காந்திசாலை மற்றும் காமராஜர் சாலைகளில் அமைந்துள்ள பச்சையப்பாஸ் சில்க்ஸ் கடைகள், செங்கல்வராயன் சில்க்ஸ் கடை மற்றும் உரிமையாளரின் வீடு என 8 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் சென்னை தியாகராய நகரில் உள்ள பச்சையப்பாஸ் துணி கடையிலும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு தொடர்பாக புகார் வந்ததை அடுத்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மாலை வரை வருமான வரித்துறை சோதனை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. …

The post வரி ஏய்ப்பு புகார்!: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8 இடங்களில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை..!! appeared first on Dinakaran.

Tags : Income tax ,Kanchipuram district ,CHENNAI ,Pachaiyappas ,Thiagaraya Nagar, ,Kanchipuram ,Income Tax department ,
× RELATED போதைப்பொருள் விற்பனை செய்தால்...