×

காவலரை சினிமா பாடலுக்கு புல்லாங்குழல் இசைக்க செய்து மது விருந்துடன் ரசிக்கும் துணை கமிஷனர்

சென்னை: மதுரை ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம் ‘குறு நில மன்னர் போல்’ வீட்டிற்கு காவலர்களை அழைத்து ஜட்டியுடன் ஆயில் மசாஜ் செய்து கொண்டு காவலர் ஒருவரை புல்லாங்குழல் இசைக்க செய்து மது அருந்தும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது போலீசாரிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழக காவல் துறையில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள் வரை அனைவரும் பணியின் போது தேவையின்றி டிக் டாக் செயலி மூலம் வீடியோ மற்றும் சினிமா பாடலுக்கு நடனமாடுவது, வசனம் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தனர். இது பொதுமக்களிடம் முகம் சுழிக்கும் நிலையை ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து காவலர்கள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை ‘ஸ்மார்ட் போன்கள்’ பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. தேவை இருப்பின் பணியின் போது உதவி கமிஷனர்கள் மற்றும் இன்ஸ்பெக்டர் அனுமதியுடன் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, போலீசார் சீருடையில் சமூக வலைத்தளங்களில் ஆடியும், பாடியும் பதிவு செய்யும் சம்பவங்கள் கட்டுப்படுத்தப்பட்டது.ஆனால் ஒரு சில உயர் அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கொண்டு தனது அலுவலகத்தில் டிக் டாக் செயலியை, மத்திய அரசு தடை செய்வதற்கு முன்பு பதிவு செய்த பதிவுகளை தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.இந்த வகையில் மதுரை நகர ஆயுதப்படை துணை கமிஷனர் சோமசுந்தரம் ஒரு படி மேலே சென்று ‘குறு நில மன்னர் போல்’ ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர்களை தனது வீட்டிற்கு அழைத்து ஒவ்வொரு வாரமும் ஜட்டியுடன் மசாஜ் செய்கிறார். அதோடு இல்லாமல் மசாஜ் ெசய்த எண்ணெய் உடலில் ஊறும் வரை காவலர் ஒருவர் அவருக்கு பிடித்த பாடலுக்கு ‘புல்லாங்குழல்’ வாசிக்க செய்து, அதை தலையை ஆட்டி, ஆட்டி ரசித்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஜட்டியுடன் ஆயில் மசாஜ் செய்து கொண்டு மது அருந்துவதும், பாடலுக்கு ஏற்றப்படி துணை கமிஷனர் சோமசுந்தரம் தனது உடலை நலினத்துடன் அசைத்து மகிழும் வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் துணை கமிஷனர் சோமசுந்தரம், காவலர் ஒருவரை புல்லாங்குழலில் ‘பொத்தி வச்ச மல்லிகை மொட்டு……பூத்துருச்சு வெக்கத்தவிட்டு…. பேசி பேசி ராசியானதே…. மாமன் பேர சொல்லி ஆளானதே… ரொம்ப நாளானதே….. என்ற பாடலை வாசிக்க செய்து மது விருந்துடன் ரசிக்கிறார். அதோடு இல்லாமல் டிக் டாக் செயலில் உதவி கமிஷனராக இருந்த போது சீருடையில் பதிவு செய்து இருந்த பாடல்கள், சினிமா வசனங்களும் தற்போது வெளியாகி போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காவல் துறையில் கன்னியமான வகையில் பணியாற்றி வரும் காவலர்களை துணை கமிஷனர் சோமசுந்தரம் தனது வீட்டிற்கு அழைத்து அடிமைகள் போல் ஆயில் மசாஜ் செய்ய சொல்லியும், மது பானங்களை வாங்கி வர சொல்லி ஊற்றி கொடுக்க செய்யும் செயல் அங்கு அவருக்கு கீழ் பணியாற்றும் காவலர்கள் இடையே மன அழுத்தத்தையும் முகம் சுழிக்கும் நிலையையும் ஏற்படுத்தியுள்ளது….

The post காவலரை சினிமா பாடலுக்கு புல்லாங்குழல் இசைக்க செய்து மது விருந்துடன் ரசிக்கும் துணை கமிஷனர் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Deputy Commissioner ,Madurai Armed Forces ,Somasundaram ,Kuru ,Nila Mannar ,
× RELATED மது கடைகளை மூட உத்தரவு