×

ஆஸ்திரேலியாவில் கவனம் பெறும் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்ட வீட்டு தோட்டம்!: ஆர்வமுடன் ரசித்து செல்லும் வழிப்போக்கர்கள்..!!

கான்பெரா: ஆஸ்திரேலியாவில் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள வீட்டு தோட்டம் வழிப்போக்கர்களை திரும்பி பார்க்க வைக்கிறது. வீட்டு தோட்டத்தை அலங்கரிப்பது அனைவருக்கும் அலாதியான மகிழ்ச்சியை தரும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவின் அடலேட் நகரில் வசிக்கும் பெண்மணி ஒருவர் 8 வருடங்களாக தனது முன்பக்க தோட்டத்தை அலங்கரித்து வருகிறார். தோட்டக்கலையில் ஆர்வம் கொண்ட ஸ்மித் என்ற அவர் செடிகள் மட்டுமின்றி பல புதுமையான பொம்மைகளை கொண்டு தோட்டத்தை அலங்கரித்துள்ளார். நாய், பூனை, குதிரை என பல விலங்கு பொம்மைகள் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளன. ஆங்காங்கே கூண்டுகளில் புறா, குருவிகள் இருப்பது போலவும் அமைக்கப்பட்டுள்ளன. தோட்டத்தின் மையத்தில் வைக்கப்பட்டுள்ள ரதம் போன்ற கூண்டு காண்போரின் கண்களை கவர்கிறது. இதுவரை 300 பொம்மைகளை சேகரித்து தோட்டத்தை அழகுபடுத்தி இருப்பதாக கூறும் ஸ்மித், மேலும் பொம்மைகளை சேகரிக்க ஆர்வம் கொண்டிருப்பதாக கூறுகிறார். இந்த பொம்மைகளை காணும் போது மக்களின் முகத்தில் வரும் சிரிப்பு மிகவும் மகிழ்ச்சி தரும். பலர் இங்கு வருவார்கள், 5 நிமிடத்திற்கு எதை பற்றியும் சிந்திக்காமல் என் தோட்டத்தை ரசித்து செல்வார்கள் என்றும் ஸ்மித் குறிப்பிட்டார். மாலை பொழுதில் அக்கம்பக்கத்தினர் இந்த பொம்மை தோட்டத்தில் நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனராம். பொம்மைகளால் நிறைந்திருக்கும் இந்த தோட்டம், ஸ்மித்திற்கு மட்டுமின்றி அவ்வழியாக பயணிக்கும் வழி போக்கர்களையும் அளவற்ற மகிழ்ச்சியை தருகிறது….

The post ஆஸ்திரேலியாவில் கவனம் பெறும் பொம்மைகளால் அலங்கரிக்கப்பட்ட வீட்டு தோட்டம்!: ஆர்வமுடன் ரசித்து செல்லும் வழிப்போக்கர்கள்..!! appeared first on Dinakaran.

Tags : Australia ,Canberra ,Dinakaran ,
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...