×

முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர் மர்ம மரணம்.! கொலை வழக்காக மாற்றம்: 5 பேர் அதிரடி கைது

கடலூர்: கடலூர் பணிக்கன் குப்பத்தில் உள்ள முந்திரி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த கோவிந்தராசு(55) என்பவர் கடந்த மாதம் 19ம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக மர்ம மரணம் என்று காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். இதற்கிடையில் கோவிந்தராசுவின் மகன் செந்தில்வேல், கோரிக்கை ஏற்று இந்த வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில் கோவிந்தராசு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து மர்ம மரண வழக்கை, சிபிசிஐடி போலீசார் கொலை வழக்காக மாற்றி உள்ளனர். இது தொடர்பாக தொழிற்சாலையின் உரிமையாளரான கடலூர் எம்பி டி.ஆர்.வி. ரமேஷ் மீது வழக்குபதிவு செய்தனர். மேலும், எம்பியின்  உதவியாளர் நடராஜ் மற்றும் அல்லா பிச்சை, சுந்தர்(எ)சுந்தர்ராஜ், வினோத், கந்தவேல் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்து கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நீதிபதி உத்தரவின் படி, விருத்தாசலம் கிளை சிறையில் அடைத்தனர்….

The post முந்திரி தொழிற்சாலையில் பணிபுரிந்த ஊழியர் மர்ம மரணம்.! கொலை வழக்காக மாற்றம்: 5 பேர் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Govindarasu ,Panikkan Kuppam, Cuddalore ,Dinakaran ,
× RELATED சென்னையில் இருந்து இளம்பெண் கடத்தல் தீவிர வாகன சோதனையால் பரபரப்பு