×

சின்னாளபட்டியில் இணையதள சேவை பாதிப்பால் ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே ரேஷன் பொருள்-பொதுமக்கள் அவதி

சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் பூஞ்சோலை, பொம்மையசுவாமி கோயில் தெரு, மேட்டுப்பட்டி, நடுத்தெரு பகுதியில் ரேஷன் கடை உள்ளன. இக்கடைகள் மூலம் இப்பகுதி மக்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.  இந்த மாதம் பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தால் வழக்கமான அரிசி, சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் 15 நாட்களுக்கு பின் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அனைத்து கடைகளிலும் கூட்டம் அலைமோதி வருகிறது. மேலும் ஸ்மார்ட் கார்டுகளை ஸ்கேன் செய்த பின்பு இணையதள சேவையும் சரியாக கிடைக்காததால் பொருட்கள் வழங்குவது தாமதமாகி வருகிறது. இதனால் தினசரி 200 முதல் 300 பேர் வரை பொருட்கள் வழங்கக்கூடிய கடைகளில் சுமார் 50 பேர் முதல் 100 பேர் வரைக்குதான் பொருட்கள் விநியோகம் செய்யும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் வெயிலில் காத்திருந்து அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த அவலநிலை மாவட்டம் முழுவதும் நீடித்து வருவதாகவும், எனவே இந்த மாதம் மட்டும் பழைய முறைப்படி ரேஷன் பொருட்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post சின்னாளபட்டியில் இணையதள சேவை பாதிப்பால் ஒரு நாளைக்கு 50 பேருக்கு மட்டுமே ரேஷன் பொருள்-பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chinnalapatti ,Pooncholai ,Pomaiyaswamy Temple Street ,Mettupatti, Nadutheru ,
× RELATED சின்னாளபட்டி சாலையில் தேங்கும்...