×

சடலங்களை மீட்பதில் தைரியசாலி தீயணைப்பு வீரர் தூக்கிட்டு தற்கொலை: பணி பளுவால் மன உளைச்சலா? விசாரணை

கோபி: கோபி அருகே தீயணைப்பு வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கோபி அருகே உள்ள பங்களாபுதூர் அடசப்பாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் சரவணன் (35). இவர் கோபி தீயணைப்பு நிலையத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கோகிலா (29), மகள் மவுனவர்சினி (6). நேற்று முன்தினம் இரவு சரவணன் வழக்கம்போல் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தார். மனைவி, மகளுடன் சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்றார்.  இந்நிலையில் அதிகாலையில் சரவணன் தூக்கில் பிணமாக தொங்கினார். இதைப்பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் இது குறித்து பங்களாபுதூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் அங்கு சோதனை நடத்தியபோது ஒரு கடிதம் சிக்கியது. அதில், ‘‘எனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை’’ என்று எழுதப்பட்டிருந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதல்கட்ட விசாரணையில் தற்கொலை செய்யும் அளவுக்கு குடும்பத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்று தெரியவந்தது.  கோபி தீயணைப்பு நிலையத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே தீயணைப்பு வீரர்கள் பற்றாக்குறை உள்ளது.அதே நேரத்தில் அதிகளவில் தீ விபத்துக்கள் நடப்பதாலும், நீர் நிலைகளில் தவறி விழுபவர்கள் அதிகளவில் உள்ளதாலும் ஆட்கள் பற்றாக்குறை காரணமாகவும் சரியான ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. இந்த பணிச்சுமை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சடலங்களை மீட்பதில் தைரியசாலி: தற்கொலை செய்து கொண்ட சரவணன் ஆறு, குளம், ஏரி மற்றும் கிணற்றில் நன்கு நீந்த தெரிந்தவர். அதோடு நீர்நிலைகளில் தவறி விழுந்தவர்கள் அல்லது தற்கொலை செய்து கொள்பவர்கள் உடலை தனியாக மீட்கக்கூடிய அளவிற்கு தைரியமும் உடையவர்.சடலங்கள் அழுகிய நிலையில் இருந்தாலும், இரவு நேரமாக இருந்தாலும்  சிறிதும் அச்சமின்றி கரைக்கு மீட்பதில்  சிறந்த வீரராக விளங்கி வந்தார். அதே போன்று தீ விபத்து நேரங்களிலும் துணிச்சலுடன் செயல்பட்டு சேதத்தை தடுப்பதில் முன்னணி வீரராக திகழ்ந்து வந்தார். சரவணனின் தற்கொலை தீயணைப்பு துறைக்கு பெரிய இழப்பு என சக ஊழியர்கள் தெரிவித்தனர்….

The post சடலங்களை மீட்பதில் தைரியசாலி தீயணைப்பு வீரர் தூக்கிட்டு தற்கொலை: பணி பளுவால் மன உளைச்சலா? விசாரணை appeared first on Dinakaran.

Tags : Gobi ,Banglaputur Atasappalayam ,Dinakaran ,
× RELATED கோபி அருகே ஒத்தக்குதிரையில்...