×

வேட்பாளர் பூங்கோதை ராஜன் ஆதரித்து திமுக பிரமுகர்கள் எம்.கே.டி.கார்த்திக், ஆப்பூர் சந்தானம் தீவிர பிரசாரம்

செங்கல்பட்டு: மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர் பூங்கோதை ராஜன் வீதி வீதியாக சென்று உதயசூரியன் சின்னத்துக்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.  காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் சிங்கபெருமாள் கோயில் 5வது மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட  தகவல்  தொழில்நுட்ப துறை செயலாளர் ராஜன் மனைவி பூங்கோதை  ராஜன், 19வது வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும்  அருள்தேவி, 13வது வார்டு ஒன்றியகுழு உறுப்பினர் பதவிக்கு  போட்டியிடும் மோகனா ஜீவானந்தம் ஆகியோர் செங்கல்பட்டு அடுத்த மகாலட்சுமி நகர், திம்மாவரம், வீராபுரம், அம்பேத்கர் நகர், பரனூர் அரசு மறுவாழ்வு இல்லம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.அவர்களை ஆதரித்து மாவட்ட திமுக இளைஞரணி மாவட்ட செயலாளர் எம்.கே.டி.கார்த்திக், ஆப்பூர் சந்தானம் ஆகியோர் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி, பொதுமக்களிடம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது, வேட்பாளர் பூங்கோதை ராஜன் பேசுகையில்,  என்னை வெற்றிபெற செய்தால் காட்டாங்கொளத்தூர் ஒன்றியங்களுக்கு உட்பட்ட 27 கிராமங்களுக்கும் சாலை வசதிகள் கட்டாயம் செய்து தருவேன்.  உங்களது எந்த கோரிக்கையானாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்பி ஜி.செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் மற்றும் மாவட்ட கலெக்டர் வரை அனைவரிடமும் நேரில் பேசி உங்களது, அனைத்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவேன் என்றார். இதில் திமுக, காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, மதிமுக உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

The post வேட்பாளர் பூங்கோதை ராஜன் ஆதரித்து திமுக பிரமுகர்கள் எம்.கே.டி.கார்த்திக், ஆப்பூர் சந்தானம் தீவிர பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : DMK ,MKD ,Karthik ,Apur Santhanam ,Poongotai Rajan ,Chengalpattu ,
× RELATED பூசாரி பாலியல் வழக்கு; சிபிசிஐடிக்கு மாற்ற கோரி மனு