×

மெகா தடுப்பூசி முகாம்களில் இன்று 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகத்தில் இன்று மெகா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்களில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை டி.எம்.எஸ்  வளாகத்தில் தேசிய நலவாழ்வு குழும ஒப்பந்த ஊழியர்களுக்கு, ஊதிய உயர்வு ஆணையை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று வழங்கினார். தொடர்ந்து, 2021 – 22ம் ஆண்டுக்கான பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியலையும் வெளியிட்டார்.இதனையடுத்து, அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி: மருத்துவ துறையில் ஒப்பந்த பணியாளர்களாக, ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து வரும், 28 ஆயிரத்து 100 பேருக்கு 30 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்கப்படுகிறது. அதன்படி, ஆண்டுக்கு 89 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும். மேலும், 2021 – 22ம் ஆண்டிற்கான பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.ஒன்றிய அரசின் தரவுகளின்படி 18 வயதை பூர்த்தி செய்த, 5,78,91,000 ஆயிரம் பேர் தடுப்பூசி போட தகுதியானவர்கள். அவர்களில், 62 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. அக்., இறுதிக்குள், 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் மெகா முகாம்களில் 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …

The post மெகா தடுப்பூசி முகாம்களில் இன்று 25 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு: மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Mega ,Public Welfare Minister ,Subramanian ,Chennai ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மதுரை வலையங்குளத்தில் மெகா சமபந்தி விருந்து