×

சதி திட்டங்கள் பற்றி புதிய அதிர்ச்சி தகவல்கள் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே காந்தியை கொல்ல துடித்த சமஸ்தானங்கள்: துப்பாக்கியை விற்ற குவாலியர் ஆயுர்வேத டாக்டர்

புதுடெல்லி: மகாத்மா காந்தி படுகொலை பற்றிய புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 153வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அவர் படுகொலை செய்யப்பட்டது பற்றிய பல புதிய அதிர்ச்சி தகவல்கள் அடங்கிய, `மகாத்மா காந்தி படுகொலை; புதிய புலானய்வு’ என்ற புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. அப்பு எஸ்தோஸ் சுரேஷ், பிரியங்கா கோதம்ராஜு எழுதிய இப்புத்தகத்தில் காந்தியை படுகொலை  செ்ய்ய திட்டமிடப்பட்டது, அதன் பின்னணி தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இதுவரையில் வௌிவராத உளவுத்துறை தகவல்கள், காவல்துறை ஆவணங்கள் அடிப்படையில் திரட்டப்பட்டு இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.புத்தகத்தில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு: ஆங்கிலேயே ஆட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தங்களின் அதிகாரத்தை இழந்த சமஸ்தான அரசுகளை சேர்ந்தவர்களும், நக்சலைட்டுகளும், சுதந்திரத்துக்கு பிறகு அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக, மகாத்மா காந்தியை நாடு சுதந்திரம் அடைந்த 1947, ஆகஸ்ட்டுக்கு முன்பாகவே கொல்வதற்கு சதித் திட்டங்கள் தீட்டியுள்ளனர். சமஸ்தானங்களுக்கு முடிவு கட்ட காந்தி எடுத்த சில நடவடிக்கைகளே இதற்கு காரணம். காந்தியை சுட்டு கொல்வதற்காக பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி பிரெட்டா வகையை சேர்ந்தது. கடந்த 1948 ஜனவரி, 20ம் தேதி அவரை சுட்டு கொல்வதற்கு எடுத்த முயற்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்தே, ஜனவரி 30ம் தேதி கொல்ல திட்டமிடப்பட்டது. இது தவறினால், எப்படியும் பிப்ரவரி 2ம் தேதி அவர் டெல்லி செல்லும் முன்பு சுட்டுக் கொல்ல தீர்மானிக்கப்பட்டது.கோட்சேவிடம் இருந்த துப்பாக்கி நன்றாக செயல்படவில்லை என்பதால் அவரும், நாராயாண் ஆப்தேவும், குவாலியரை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவரும் இந்து ராஷ்டிரிய சேனாவை நிறுவியவருமான தாத்தரேயா பார்சூர் உதவியுடன் துப்பாக்கி வாங்க சென்றனர். காந்தியை கொல்வதற்கு 2 நாட்கள் முன்னதாக, கங்காதர் தாந்த்வடேவிடம் இருந்து பிரெட்டா ரக துப்பாகி வாங்கப்பட்டது. அது முறையாக இயங்குகிறதா என்று சரி பார்க்கப்பட்டது. * துப்பாக்கியை திருப்பி கொடுக்க வேண்டும், இல்லை என்றால் ரூ.500 தர வேண்டும் என்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தான் துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டது.* அதன்படி, ரூ.300 மட்டுமே அப்போது கொடுக்கப்பட்டது. * மீதம் ரூ.200ஐ அனுப்பி வைப்பதாக கூறப்பட்டுள்ளது. * இந்து ராஷ்டிரிய சேனா அமைப்பின் பொருளாளராக இருந்த ஜகதீஷ் பிரசாத் கோயல் என்பவரிடம் இருந்தே துப்பாக்கி வாங்கப்பட்டது. பின்னர், கோட்சே லாட்ஜ் புக்கிங் கிளார்க் சுந்தர் லாலுவுக்கு லஞ்சம் கொடுத்து 29ம் தேதி தங்கும் அறை வாடகைக்கு எடுத்தார். மறுநாள் மாலை 5.17 மணிக்கு அரை ஆடையணிந்த காந்தி, பிர்லா ஹவுசில் இருந்து வெளியே வந்தார். அப்போது, டிரவுசர் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த பிரெட்டா துப்பாக்கியால் கோட்சே காந்தியை சுட்டுக் கொன்றார். அகிம்சையின் வழிகாட்டி அல்லது தேச விரோதியை சுட்டதாக நினைக்கிறார்கள். அவர்கள் கொன்றது அன்பே கடவுள் என்று நினைப்பவரை. அவர்கள் காந்தியை முற்றிலும் தவறாக புரிந்து கொண்டவர்கள்.இவ்வாறு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது….

The post சதி திட்டங்கள் பற்றி புதிய அதிர்ச்சி தகவல்கள் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே காந்தியை கொல்ல துடித்த சமஸ்தானங்கள்: துப்பாக்கியை விற்ற குவாலியர் ஆயுர்வேத டாக்டர் appeared first on Dinakaran.

Tags : Gandhi ,Gwalior Ayurveda ,New Delhi ,Mahatma Gandhi ,
× RELATED அமேதி, ரேபரேலி வேட்பாளர்கள் யார்?.....