திருவள்ளுவர்: திருவள்ளூர் அடுத்த பன்னூர் அந்தோணியார்புரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரான்சிஸ். இவரது மனைவி லில்லி. இவர்களுக்கு 5 மகள்கள். மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2வது மகள் விசாலி(26), கள்ளம்பேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், திருமணம் செய்து கொள்ளும்படி விசாலியிடம் அவரது பெற்றோர் கூறியுள்ளனர். அதற்கு அவர், `இப்போது எனக்கு திருமணம் வேண்டாம்’ என்று கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. `இன்னும் 3 மகள்கள் இருக்கிறார்கள். நீ திருமணம் வேண்டாம் என்றால் அவர்களுக்கு எப்போதுதான் திருமணம் செய்ய முடியும். அதனால் நீ திருமணம் செய்துதான் ஆக வேண்டும்’ என்று பெற்றோர் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த விசாலி, ஆத்திரத்துடன் நேற்று முன்தினம் வீட்டின் கதவை பூட்டி கொண்டு உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். இதனால் உடல் முழுவதும் தீ பரவியது. இதில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு பெற்றோர் மற்றும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று தீ காயங்களுடன் இருந்த விசாலியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விசாலி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து லில்லி கொடுத்த புகாரின்பேரில் மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. …
The post திருமணத்திற்கு பெற்றோர் வற்புறுத்தியதால் பள்ளி ஆசிரியை தீக்குளித்து சாவு: திருவள்ளூர் அருகே சோகம் appeared first on Dinakaran.
