×

ரவுடியிசத்தை கட்டுப்படுத்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதம் வாங்குவோர் விபரம் பதிவு செய்ய வேண்டும்: கடை, பட்டறை உரிமையாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் அந்தந்த காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கத்தி, வீச்சரிவாள் போன்றவற்றை தயார் செய்யும் உலிாமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரையும் காவல் நிலையங்களுக்கு நேரில் அழைத்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவுப்படி கூட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் 579 கூட்டங்களில் 2,548 பேர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறை அதிகாரிகளுக்கு அனுப்பிவுள்ள சுற்றறிக்கை; * அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும். அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.* விவசாயம், வீடு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயுதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யகூடாது.* கண்காணிப்பு கேமராக்களை கடை மற்றும் பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல்துறை உதவி செய்ய வேண்டும்.* குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல் துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும்….

The post ரவுடியிசத்தை கட்டுப்படுத்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதம் வாங்குவோர் விபரம் பதிவு செய்ய வேண்டும்: கடை, பட்டறை உரிமையாளர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGB Sylendrababu ,Chennai ,Tamil Nadu ,
× RELATED கல்வி தொடர்பான திரைப்படங்களை பள்ளி,...