×

அஜித் 61வது படம் அறிவிப்பு வெளியானது

சென்னை: வலிமை படத்துக்கு பிறகு அஜித் நடிக்க இருக்கும் அவரது 61வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்தார். இந்த படத்தை வினோத் இயக்கி இருந்தார். இதற்கு பிறகும் மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்துள்ளது. இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என போனி கபூர் தெரிவித்துள்ளார். இதில் ஹுமா குரேஷி, யோகி பாபு, சுமித்ரா, கார்த்திகேயா உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு பிறகு அஜித் நடிக்கும் 61வது படத்தையும் நானே தயாரிக்கிறேன் என போனி கபூர் அறிவித்துள்ளார். ‘மூன்றாவது முறையாக அஜித்துடன் இணைய உள்ளேன். இந்த படத்தையும் வினோத் இயக்குவார்’ என தெரிவித்துள்ளார்….

The post அஜித் 61வது படம் அறிவிப்பு வெளியானது appeared first on Dinakaran.

Tags : chennai ,ajith ,Srideevi ,
× RELATED சிறந்த தொண்டு நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்