×

4வது முறையாக அக்.3ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்!: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!!

சென்னை: 4வது முறையாக அக்டோபர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று மருத்துவ அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், 24.98 லட்சம் தடுப்பூசிகள் இருப்பதால் 20 ஆயிரம் மையங்களில் முகாம் நடத்தப்படுகிறது. திங்கட்கிழமை தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை எனவும் குறிப்பிட்டார். மேலும் அக்டோபர் இறுதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்….

The post 4வது முறையாக அக்.3ம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறும்!: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mega Vaccine Camp ,Subramanian ,Chennai ,Medical Minister ,Ma. Suparamanian ,Minister ,Ma. ,Dinakaran ,
× RELATED ஈஷா அறக்கட்டளை சார்பில் மின்தகன மேடை அமைப்பதை எதிர்த்து வழக்கு..!!