×

இந்திய தொலைத்தொடர்பு துறையில் களமிறங்கும் ஜெஃப் பெசோஸ் , எலான் மஸ்க்: அதிவேக பிராட்பேண்ட் சேவை வழங்க திட்டம்!!

டெல்லி : உலகின் முதன்மை பணக்காரர்களான ஜெஃப் பெசோஸ் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் இந்தியாவின் பிராட்பேண்ட் சேவையில் களம் இறங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய தொலைத்தொடர்பு துறையில் ரிலையன்ஸ் ஜியோவை தவிர்த்து மற்ற நிறுவனங்கள் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. இருப்பினும் ஏராளமான சந்தை வாய்ப்புகள் குவிந்து கிடப்பதால் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். அதிவேக பிராட்பேண்ட் சேவைகளை வழங்க இரு நிறுவனங்களும் ஒன்றிய அரசுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதில் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங் சேட்டிலைட் இணைய சேவை நிறுவனத்தின் மூலம் இந்தியாவில் சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளார்.இதன் மூலம் DTH போல வீட்டின் மேற்கூரையில் ஆண்டனாவை பொருத்தி சேட்டிலைட் மூலம் நேரடியாக இணைய சேவையை பெறலாம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஸ்டார்லிங் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனராக Paypal நிறுவன அணியில் ஒருவராக இருந்த சஞ்சீவ் பார்கவா நேற்று நியமிக்கப்பட்டுள்ளார். அமேசான் மற்றும் ஸ்டார்லிங் ஆகிய நிறுவனங்களும் லைசன்ஸ் கோரி விரைவில் விண்ணப்பிக்கும் என்று ஒன்றிய அரசு எதிர்பார்த்துள்ளது….

The post இந்திய தொலைத்தொடர்பு துறையில் களமிறங்கும் ஜெஃப் பெசோஸ் , எலான் மஸ்க்: அதிவேக பிராட்பேண்ட் சேவை வழங்க திட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Jeff Bezos ,Elon Musk ,Delhi ,India ,Dinakaran ,
× RELATED X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள்...