×

மறைமுக ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம்

சத்தியமங்கலம் :  ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டியில்  ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை விற்பனை குழு அதிகாரிகள் முன்னிலையில் நேரடி நிலக்கடலை ஏலம் நடைபெற்ற வந்தது. தற்போது பஞ்சை புலியம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மானாவாரியாக பயிரிடப்பட்டுள்ள நிலக்கடலை அறுவடை நடந்து வருவதால் ஒழுங்கு முறை விற்பனை கூடத்துக்கு நிலக்கடலை வரத்து துவங்கியுள்ளது. நேற்று நடந்த ஏலத்துக்கு ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிலக்கடலை மூட்டைகளை ஏலத்துக்கு கொண்டு வந்தனர்.  இதுவரை  நேரடி  ஏலம் நடைபெற்று வந்த நிலையில்  தற்போது மறைமுக ஏலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த இரண்டு வாரங்களாக மறைமுக ஏலம் நடைபெற்று வருகிறது.  மறைமுக ஏலம் நடத்துவதால் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் போய்விடும் என்பதால் மறைமுக ஏலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் நேரடி ஏலம் மூலம் மட்டுமே நிலக்கடலை  ஏலம் விட வேண்டும் என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து தமிழக விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் வேணுகோபால் தலைமையில் ஏலத்தில் கலந்து கொள்ள வந்த விவசாயிகளிடம் கருத்து  கேட்கப்பட்டது. இதில் பெரும்பாலான விவசாயிகள் மறைமுக ஏலத்தில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது. மறைமுக ஏலம் வேண்டாம், நேரடி வாய்மொழி மூலம் ஏலம் நடத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து விவசாயிகள் அனைவரும் சேர்ந்து மனு அளித்ததை தொடர்ந்து   அடுத்தவாரம் முதல் நேரடி  ஏலம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் சமரசத்தை ஏற்றுக்கொண்ட விவசாயிகள் வழக்கம்போல் ஏலத்தில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது….

The post மறைமுக ஏலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் வாக்குவாதம் appeared first on Dinakaran.

Tags : Sathyamanalam ,Punchai Puliyambati, Erode District ,Dinakaraan ,
× RELATED கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில்...