×

ரூ2 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: இருவர் கைது

உத்திரமேரூர்: மளிகை கடை குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, வடமாநிலத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். உத்திமேரூர் அடுத்த சாலவாக்கம் பகுதியில் மளிகை கடை ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக, சாலவாக்கம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் போலீசார், நேற்று காலை, சம்பவ இடத்துக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது, மளிகை கடைக்கு சொந்தமான ஒரு குடோனில், தடை செய்யப்பட்ட ஹான்ஸ், குட்கா, பான்மசாலா உள்பட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 22 பார்சல்களில் இருந்த சுமார் ரூ2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த மளிகை கடை உரிமையாளர்கள் வடமாநிலத்தை சேர்ந்த கானா ராவ்(40), சுக்காராம்(40) ஆகியோரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்….

Tags : Kudka ,Utramerur ,Gudon ,North State ,Salvakam police ,Salawakam ,Uttimerur ,
× RELATED முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர்,...