×

தேனியில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

தேனி, மார்ச் 28: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் 309 மனுக்கள் பெறப்பட்டன.
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். இதன்படி நேற்று கலெக்டர் ஷஜீவனா தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மதுமதி, தனித்துணை ஆட்சியர் ந.சாந்தி மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 309 பேர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர். இதில் பெரும்பாலான மனுக்கள் சமூக பாதுகாப்புத் திட்ட உதவித் தொகைகள், மாற்றுத் திறனாளி அடையாள அட்டை, பட்டாகோருதல், பட்டாமாறுதல், கல்விக்கடன், இலவச தையல் எந்திரம், மற்றும் காவல்துறை தொடர்பான மனுக்களை அளித்தனர். இம்மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுத்து, அதனை மனுதாரர்களுக்கு அனுப்பும்படி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷஜீவனா உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தின்போது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், நடப்பு நிதியாண்டிற்கான நாட்டுக்கோழி பண்ணை, பசுமாடு, பெட்டிக்கடை, மளிகைக் கடை, கைபேசி பழுதுநீக்கம் செய்யும் கடை, ஜவுளிவியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில் தொடங்கிட 17 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்து 663 மதிப்பிலான சுயவேலைவாய்ப்பு வங்கிக் கடன் மானியத் தொகை பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

Tags : Theni ,Collector ,
× RELATED டிடிவி மீது கிரிமினல் வழக்கு; தேனி கோர்ட்டில் மனு