பெரியகுளம் நகர் மன்ற கூட்டம் ஒத்திவைப்பு

பெரியகுளம், மார்ச் 28: பெரியகுளம் நகர் மன்ற கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் நகர்மன்ற சாதாரண கூட்டம் நடைபெற இருந்த நிலையில், நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தலைமையில் கூட்டம் நடைபெற இருந்தது. இந்நிலையில், நகர் மன்ற உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்து கொள்ளாததால் கூட்டம் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் கூட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பதாக நகர்மன்ற தலைவர் சுமிதா சிவக்குமார் தெரிவித்தார்.

Related Stories: