×

மாநில கபடி போட்டியில் மைக்குடி அணி வெற்றி

திருமங்கலம், மார்ச் 28: திருமங்கலம் அடுத்துள்ள மைக்குடி கிராமத்தில் திமுக கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 70 அணியினர் கலந்து கொண்டனர். நாக் அவுட் முறையில் நடைபெற்ற இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் மைக்குடி அணி, கீழக்குயில்குடி அணியும் மோதின. இதில் மைக்குடி அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிக்கு மதுரை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மு.மணிமாறன் வெற்றி கோப்பை, பரிசினை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் பாண்டியன், திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணை தலைவர் ஆதவன் அதியமான், பொதுக்குழு உறுப்பினர் பிஎஸ்என்எல் செல்வம், ஒன்றிய கவுன்சிலர் புவனேஸ்வரி ராஜசேகர், கருவேலம்பட்டி வெற்றி, கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் தனுஸ்கோடி, ராஜேஸ்வரி சந்திரன், ரஞ்சித்குமார், விஜயன், இளைஞரணி ஓடைக்கரை, தென்பழஞ்சி செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Maikudi ,
× RELATED திருமங்கலம் – காரியாபட்டி சாலையில்...