×

சிவகிரி அருகே செங்கல் சூளையில் மது விற்ற மேற்கு வங்க வாலிபர் கைது

சிவகிரி, மார்ச் 28: சிவகிரி அருகே செங்கள் சூளையில் பதுக்கிவைத்து மது விற்ற மேற்குவங்க வாலிபரை போலீசார் கைது செய்தனர். சிவகிரி அருகே நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் கணேசன் என்பவருக்குச் சொந்தமான செங்கல்சூளையில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஏராளமானோர் குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.  இவர்களுக்கு சிலர் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து புளியங்குடி டிஎஸ்பி அசோக்குமார் உத்தரவின் பேரில் சிவகிரி எஸ்ஐ சஜூன் தலைமையில் போலீசார் செங்கல் சூளை பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது செங்கல்சூளையில் மதுபானத்தை பதுக்கிவைத்து விற்பனை செய்த மேற்குவங்காளத்தைச் சேர்ந்த சுபுதின் மந்தாள் மகன் ரஞ்சன் மந்தாள் (43) என்பவரை கண்டறிந்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 50 மதுபாட்டில்களை  பறிமுதல் செய்தனர்.

Tags : West Bengal ,Sivagiri ,
× RELATED மேற்கு வங்க மாநிலத்தில் கஞ்ஜன்ஜங்கா...