சிப்காட் பூங்காவில் கம்பி வேலி திருடிய 4பேர் கைது.

தூத்துக்குடி, மார்ச்28: தூத்துக்குடி மீளவிட்டான் பகுதியில் உள்ள சிப்காட் பூங்காவில் கம்பிவேலி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த கம்பிவேலியை  மர்ம நபர்கள் வெட்டி திருடி சென்றனர். இது குறித்து பூங்கா காவலாளி வெயிலுகந்தபெருமாள் என்பவர் சிப்காட் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.விசாரணையில், தூத்துக்குடி மீளவிட்டானை சேர்ந்த முனியசாமி மகன் இசக்கிமுத்து (23), பெருமாள் மகன் சரண்ராஜ் (23), தூத்துக்குடி டூவிபுரத்தை சேர்ந்த பாக்கியராஜ் மகன் சிவலிங்கம் (23) ஆகியோர் சிப்காட் பூங்காவில் இருந்த கம்பி வேலியை திருடி தூத்துக்குடி சில்வர்புரம் பகுதியில் சந்திரன் மகன் அய்யப்பன் (46) என்பவரின் பழைய இரும்பு கடையில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து  சிப்காட் எஸ்ஐ சங்கர் தலைமையிலான போலீசார், இசக்கிமுத்து, சரண்ராஜ், சிவலிங்கம் மற்றும் அய்யப்பன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து திருடப்பட்ட ரூ.3ஆயிரம் மதிப்புள்ள கம்பி வேலியையும் பறிமுதல் செய்தனர்.

Related Stories: