பள்ளி ஆண்டு விழா

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி ஏத்தக்கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 10வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தாளாளர் பாண்டிச்செல்வம் தலைமை தாங்கினார்.

பள்ளி இயக்குனர்கள் கபில் மற்றும் டாக்டர் வாகினி ஆகியோர் வரவேற்றனர். பள்ளி முதல்வர் வீரலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். விழாவில் பேச்சாளர் கவிதா ஜவகர் தன்னம்பிக்கை உரையாற்றினார். விழாவில் தமிழ்நாடு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளின் அசோசியேசன் தலைவர் லட்சுமி வாசன், தேனி மாவட்ட தலைவர் எம்.என்.பிரபாகரன் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில், நடன, நாட்டிய, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: