அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

பரமக்குடி: பரமக்குடியில் மாவட்ட செயலாளர் முனியசாமி முன்னிலையில், அமமுக நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். மேலும், மாவட்ட மாணவர் அணி பொருளாளர் சம்பத், ஒன்றிய அவைத் தலைவர் கோட்டைச்சாமி உள்ளிட்ட நிர்வாகிகள், கீழக்கரை ஓபிஎஸ் அணி நகர செயலாளர் சாகுல் ஹமீது, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் சாதிக், தங்கச்சிமடம் மதிமுக நகர் செயலாளர் மாரிமுத்து உள்ளிட்ட நிர்வாகிகள் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அதிமுகவில் இணைந்த புதிய நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் முனியசாமி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் செந்தில்குமார், வேந்தோணி ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி, வெங்கல குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட நகர பேரூர் ஒன்றிய கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: