×

பைக் திருடிய வாலிபர் கைது

பல்லடம், மார்ச் 27: பல்லடம்  அண்ணா நகரைச் சேர்ந்தவர் கோகுல். தனியார் நிறுவன ஊழியர். கடந்த 18ந்தேதி  இவருடைய வீட்டின் முன்பு நிறுத்திய பைக் திருட்டுப்போனது.  
அதே வீதியில் உள்ள திவாகர் என்பவரது மோட்டார் பைக்கும் திருடப்பட்டது. இது  குறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வந்தனர். இந்த நிலையில் நேற்று அருள்புரம் பஸ் நிறுத்த பகுதியில் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அந்த வழியே வந்த இளைஞரை பிடித்து  விசாரித்தனர். விசாணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையைச்  சேர்ந்த ராமையன் மகன் அரிஹரசுதன் (21), மோட்டார் பைக் திருட்டில்  ஈடுபட்டவர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார்  அவரிடம் இருந்து 1 மோட்டார் பைக்யை பறிமுதல் செய்தனர். மோட்டார் பைக்  திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மேலும் 2 பேரை போலீசார் தேடி  வருகின்றனர்.

Tags : Valier ,
× RELATED டிரைவரை அடித்து கொன்ற வாலிபர் மீது குண்டாஸ்