திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி பார்க்க ஏதுவாக தனி இடம்

மன்னார்குடி: டிசம்பர் 3 இயக்க மாற்றுத் திறனாளிகள் நலச்சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் ரபீக் அகமது, மாவட்ட பொருளாளர் ஜெயரா மன் ஆகியோர் திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருயை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர். மனுவின் விபரம், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச மனை பட்டா மற்றும் வீடுகளை முன்னுரிமை அடிப்படையில் வழங்க வேண்டும். வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்ட வந்த மாத உதவித்தொகை எந்தவித காரணமும் இல் லாமல் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அவர்களில் தகுதியான அனை வருக்கும் மாத உதவித் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒருமுறை மாவட்ட கலெக்டர் தலைமையில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடத்த வேண்டும்.உலக பிரசித்தி பெற்ற திருவாரூர் ஆழித்தேரோட்டத்தை மாற்றுத் திற னாளிகள் சிரமமின்றி பார்க்க ஏதுவாக தனி இடம் ஒன்றினை ஒதுக்கி தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.  மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சாரு உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: