ஜெயங்கொண்டம்: அரியலூர் மாவட்டம் தா.பழூர் கொள்ளிடம் ஆற்றில் இருந்து கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ஆண்டிமடம் பகுதிக்கு குழாய் அமைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் குழாயில் ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகருக்கு செல்லும் சாலையில் உடைப்பு ஏற்பட்டு கடந்த ஆறு நாட்களாக குடிநீர் சாலையில் வீணாக ஓடி வருகிறது. இதன் மூலம் குடிநீர் பெறக்கூடிய கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் முக்கிய அதிகாரிகள் இவ்வழியாக சென்று வந்தாலும் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய யாரும் முன் வரவில்லை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.