×

பெரிய கொடிவேரியில் திமுக சார்பில் இருதய மருத்துவ முகாம்

கோபி, மார்ச் 27:  கோபி அருகே உள்ள பெரிய கொடிவேரியில் டி.என்.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி கண் மற்றும் இருதய மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதலமைச்சர் பிறந்தநாளையொட்டி கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சிவபாலன் தலைமையில் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டி.என்.பாளையம் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து பெரிய கொடிவேரியில் கொடியேற்றி வைத்து இனிப்பு வழங்கிய மாவட்ட செயலாளர்  நல்லசிவம், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள்சாமி, மாவட்ட பொருளாளர் கொங்கர்பாளையம் சண்முகம் ஆகியோர் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து 20 சாலையோர வியாபாரிகளுக்கு 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குடைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் நல்லசிவம் வழங்கினார்.  நிகழ்ச்சியில், பேரூராட்சி தலைவர்கள் சிவராஜ் (வாணிப்புத்தூர்), தமிழ்மகன் சிவா(பெரிய கொடிவேரி) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Periya Kodiveri ,
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி